நெல்லையில் பெரும் பரபரப்பு!...இழுத்து மூடப்பட்ட நீட் பயிற்சி மைய தங்கும் விடுதி!...65 மாணவர்கள் உடனடியாக வெளியேற்றம்!
Huge commotion in nellai neet coaching center hostel pulled down 65 students immediately expelled
நெல்லையில் ஜல் நீட் பயிற்சி என்ற பெயரில் தனியார் நீட் பயிற்சி மையம் இயங்கி வரும் நிலையில், இங்கு சுமார் 80 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கிடையே இந்த பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜவாலுதீன் அகமது வெட்டியாளன் என்பவர் நடத்தி வரும் நிலையில், இவர் மாணவர்களை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் நடைபெற்ற நீட் அகாடமிக்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர், அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மனித உரிமை மீறல் நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த விசாரணையில், விடுதி செயல்பட சமூக நலத்துறையிடம் அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்ததை அடுத்து, சமூக நலத்துறை தகுந்த காரணம் காட்டி கோரி பயிற்சி மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து விடுதி கட்டிடத்தின் உரிமையாளர் உடனடியாக விடுதியை காலி செய்ய கூறிய நிலையில், விடுதியில் தங்கி இருந்த 52 மாணவிகள் மற்றும் 13 மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Huge commotion in nellai neet coaching center hostel pulled down 65 students immediately expelled