ரெயில் நிலையம் அருகே கிடந்த மனித கால்! அதிர்ச்சியில் ரெயில்வே ஊழியர்கள்!
human leg Chetpat railway station
சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தின் அருகே உள்ள தண்டவாளத்தில் மனித கால் துண்டாக கிடந்துள்ளது.
இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சமத்துவ இடத்துக்கு விரைந்து சென்று துண்டாக கிடந்த காலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கால் யாருடையது என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தண்டவாள பராமரிப்பு பணிக்காக யார்டுக்கு வந்தபோது இந்த கால் ரெயிலில் அடிபட்டு தொங்கி வந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். அது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
human leg Chetpat railway station