ராணிப்பேட்டை: பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!
Ranipettai Rowdy Srinivasan Police
ராணிப்பேட்டை மாவட்டத்தில், பிரபல ரவுடியாக விளங்கிய சீனிவாசன் மர்மக் குழுவின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெண்டாடி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் மறைந்திருந்த மர்மக் கும்பல், சீனிவாசனை வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மர்மக் கும்பல் பற்றிய தகவல்களைத் தேடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை டிஎஸ்பி ஜாஃபர் சித்திக் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், மர்மக் குழுவினரை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொலை முன்விரோதம் காரணமாக நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராணிப்பேட்டை பகுதியில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
English Summary
Ranipettai Rowdy Srinivasan Police