தஞ்சை கொலை - கல்வித்துறை செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணையம் புகார்..! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியை ரமணி என்பவரை அவரது காதலர் மதன்குமார் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கோவி.செழியன் உள்ளிட்டோர் கொலை நடந்த பள்ளிக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை செய்த விவகாரம் தொடர்பாக, பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம் புகாரை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, கொலை நடந்த பள்ளியில் வாட்ச்மேன் இல்லை, நுழைவு கேட் இல்லை என்றும், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பு இன்றி இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

human rights commission petition against education department secretary for thanjavur teacher murder issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->