கடலூர் | கணவன் - மனைவி தகராறு! உள்ளே புகுந்த மாமனார்! அடுத்து நடந்த பயங்கரம்! - Seithipunal
Seithipunal


திட்டக்குடி அருகே மகளை தாக்கியதால் ஆத்திரமடைந்த மாமனார் மருமகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:

கடலூர் மாவட்டம்: திட்டக்குடி அடுத்துள்ள நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 35). இவர் பி.இ. படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். 

இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து சத்யம் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு, வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அதே பகுதியில் மரம் வெட்டும் கூலித் தொழிலை செய்து வந்தார். 

தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரகுபதிக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்ததால் ரகுபதி தினமும் மது அருந்திவிட்டு மனைவி சத்யாவை அடித்துள்ளார். சத்யா கதறிய சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சத்யாவின் தாய் சசிகலா, ரகுபதி வீட்டிற்கு வந்து ஏன் என் மகளை அடிக்கிறாய், உனக்கு என்ன வேண்டும்? என்ன பிரச்சனை? என கேட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி அங்கு கீழே இருந்த செங்கலை எடுத்து மாமியார் சசிகலாவை தாக்கியதில் அவரது பல் உடைந்து பல காயம் ஏற்பட்டதால் அருகில் இருந்தவர்கள் சசிகலாவை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த ரகுபதியின் மாமனார் செல்வராஜ் (வயது 55) ரகுபதியை, எதற்கு பிரச்சனை செய்கிறாய் என கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

அதில் ஆத்திரமடைந்து செல்வராஜ் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ரகுபதி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து ரகுபதியின் தாய் சகுந்தலா போலீசாரிடம் கொடுத்த புகாரில் ரகுபதியின் மாமனார் செல்வராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகனை மாமனார் கடையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பெரும் படுத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife problem father in law killed son in law


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->