சண்டையிட்ட மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் புது மாப்பிள்ளை தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி திருமணமான 7 மாதத்தில் கிரேன் ஆபரேட்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகரில் வசித்து வரும் ஆரோக்கிய ராஜுக்கும் ஜெனிபருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. 

கணவர் ஆரோக்கியராஜ் உடன் சண்டையிட்ட மனைவி ஜெனிஃபர் அவருடைய தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆரோக்கியராஜ் வீடியோ ஒன்றை பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த மகாகவி பாரதி நகர் போலீசார் ஆரோகிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆரோக்கியராஜ் பதிவு செய்த வீடியோ குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 7 மாதங்களில் புது மாப்பிள்ளை ஆரோக்கியராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband commits suicide wife quarrels and goes to mother house in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->