#வேலூர் || மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவர் தூக்கு போட்டு தற்கொலை.!
Husband suicide due to family problem with wife in vellore
வேலூர் மாவட்டத்தில் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் நவீன்(25). இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த நவீன் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைபார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்காம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband suicide due to family problem with wife in vellore