பேச மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலியை அறிவாளால் வெட்டிய கள்ளக்காதலன்.!!
illegal boyfriend arrested for hacking a woman in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் பேச மறுத்த கள்ளக்காதலியை அறிவாளால் வெட்டிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் கீழ்குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மனைவி மணிமேகலை(35). இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்து கணவர் ரத்தினவேல், மணிமேகலையை கண்டித்து ஏலகிரியான்ககொட்டாயில் உள்ள மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இதனால் மணிமேகலை கடந்த சில நாட்களாக முருகனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் நேற்று முன் தினம் மாலை வேலை முடிந்து மணிமேகலை கார்மென்ட்சில் இருந்து வெளியே வந்தபோது, அறிவாளால் மணிமேகலையை வெட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த மணிமேகலையை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மணிமேகலையை அறிவாளால் வெட்டிய கள்ளக்காதலன் முருகனை கைது செய்தனர்.
English Summary
illegal boyfriend arrested for hacking a woman in dharmapuri