கிருஷ்ணகிரியில் பரபரப்பு.! கள்ளக்காதலியை அறிவாளால் வெட்டிய கள்ளக்காதலன் கைது.!
illegal boyfriend arrested for hacking a woman in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளக்காதலையை அறிவாளால் வெட்டிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூர் கொல்லை கிராம பகுதியை சேர்ந்த சின்னமல்லா என்பவரின் மனைவி ருத்ரம்மாள்(40). இந்நிலையில் ருத்ரம்மாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த ருத்ரா (38) என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து ருத்ரம்மாள் கள்ளக்காதலை கைவிட முடிவு செய்து ருத்ராவிடம் பேசாமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ருத்ரா அறிவாளால் ருத்ரம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ருத்ரம்மாளை அறிவாளால் வெட்டிய ருத்ராவை தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று தலைமறைவாக இருந்த ருத்ராவை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
English Summary
illegal boyfriend arrested for hacking a woman in kirishnagiri