புதுவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..உடனே பதிவு செய்யுங்கள்!
Important announcement for the people of Puducherry. Register now!
24 -02- 2025 முதல் 28-02- 2025 வரை புதுவை மக்களுக்கு சிறப்பு விபத்து காப்பீடு திட்டம் பதிவு - வாரம் நடைபெறஉள்ளது.
இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருகிறது. அதன்படி மிகவும் பயனுள்ள, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள திட்டமான விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக விபத்து காப்பீடு பதிவு - வாரம் (பிப் 24 முதல் பிப் 28 வரை) என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
நாள்தோறும் வேலை செய்யும் இடங்களில், வீடுகளில், பயணங்களின் போது என பல்வேறு எதிர்பாராத விபத்துகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனால் வருவாய் இழப்பு, கடன், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றன.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகின்றது.
திட்டத்திற்கான வயது வரம்பு:-
18 முதல் 65 வயதுக்குட்பட்ட இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் : -
ஆதார் எண், மொபைல் எண், வாரிசுதாரரின் (நாமினி) விவரங்கள்.
திட்டத்தின் கட்டண விபரங்கள் : -
ரூ. 320 க்கு ரூ. 5,00,000,
ரூ. 559 க்கு 10,00,000,
ரூ. 799 க்கு 15,00,000 என்ற வகைகளில் இந்த திட்டத்தில் இணையலாம்.
விபத்து காப்பீடு திட்டத்தை எங்கு பெறலாம்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இத்திட்டத்தினை பதிவு செய்து கொள்ளலாம். புதுச்சேரி முழுவதிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் 2025 பிப்ரவரி 24 தேதி முதல் 28 தேதி வரை நடத்தப்பட உள்ளன.
எனவே புதுவை மக்கள் இந்த நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தி திட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அனைத்து அஞ்சலகங்களையும் அணுகலாம் அல்லது 9894881575 என்ற எண்ணில் புதுச்சேரி கிளை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.
English Summary
Important announcement for the people of Puducherry. Register now!