கிருஷ்ணகிரி கொடூரம்: கைதானவர்கள் செல்போனில் பல பெண்களின்... பெரும் அதிர்ச்சியில் போலீசார்!
Krishnagiri Incident case
கிருஷ்ணகிரி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய இளைஞர் ஒருவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர், இதன் பின்னணியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மலையில் உள்ள தர்காவிற்கு வந்த 35 வயது பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கலையரசன், அபிஷேக், சுரேஷ், நாராயணன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது வழிப்பறி மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞரின் செல்போன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில், ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும் போலீசாரின் விசாரணையில், குற்றவாளிகள் பல பெண்களை மிரட்டியும், வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது, எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பதற்கான தொடர் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
Krishnagiri Incident case