திருச்சி கணவன் - மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்..! மின்சாரத்தில் கவனம் தேவை..!!
in trichy husband wife died electric shock
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பிள்ளையார்கோவில்பட்டி அருகேயுள்ள சிதம்பட்டியை சார்ந்தவர் தர்மன் (வயது 30). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஜான்சிராணி (வயது 25). இவர் பி.எட். பட்டம் பயின்றுள்ளார். இவர் வீட்டில் உள்ள துணியை துவைத்து முடித்து., வீட்டருகே இருக்கும் கம்பத்தில் துணி காயப்போட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
இந்த சமயத்தில்., அதிவேகத்துடன் காற்று வீசியதை அடுத்த., வீட்டின் வழியாக செல்லும் மின் வயரின் மீது கொடிக்கம்பியானது எதிர்பாராத விதமாக உரசியுள்ளது. இதனை பார்க்காத ஜான்சி துணியை காயப்போட்டுக்கொண்டு இருந்த சமயத்தில்., அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அலறித்துடித்த பெண்ணின் அலறல் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவன்., சம்பவ இடத்தில் மனைவி துடிதுடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மனைவியை காப்பாற்றுவதற்காக சென்ற தர்மனும் மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளாகவே., இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்ததை அடுத்து., பதறிப்போன அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்., இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தர்மர் சென்னையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கும் ஜான்சிராணிக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. திருமணத்திற்கு பின்னர் வீட்டில் குளியலறை எடுத்த நிலையில்., வீட்டின் பின் புறத்தில் இருந்து குளியலறைக்கு மின்சாரம் எடுத்துள்ளார்.
இருவரும் அன்போடு வாழ்ந்து வந்த நிலையில்., பணியின் காரணமாக சென்னைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு அடிக்கடி வரும் வழக்கத்தை வைத்துள்ளார். அந்த வகையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் திருச்சியில் வந்த நிலையில்., குளியலறைக்கு வரும் மின்சார கம்பியை ஒட்டியே., துணி காய போடும் கம்பியும் இருந்துள்ளது.
இந்த சமயத்தில்., துணியை காயப்போட்டுக்கொண்டு இருந்த சமயத்தில்., எதிர்பார்பாராத வகையில் மின்சார கம்பியின் மீது ஜான்சிராணியின் முடி எதிர்பாராத விதமாக படவே., உடல் முழுவதும் மின்சாரம் தாக்கி அலறித்துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாசமிகு கணவர் தர்மர் மனைவியை காப்பாற்ற சென்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக பலியாகினர்.
இது குறித்து தர்மரின் பெற்றோர் கண்ணீருடன்., மகன் மற்றும் மருமகளை இழந்தது பெரும் சோகமாக உள்ளது. எனது மகன் சென்னையில் பணியாற்றும் நேரத்தில்., எனது மருமகள் தான் எங்களை கவனித்துக்கொள்வர். இருவரும் எங்களின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தனர். இருவரையும் ஒரே நாளில் இழப்போம் என்று நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy husband wife died electric shock