சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள்.! தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது.

இதில் வன்புணர்வு, பாலியல் சீண்டல், தொழிநுட்பத்தை பயன்படுத்தி பாலியல் தொந்தரவு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு தனிப் பிரிவுகளாக சட்டம் வகுத்து போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 20,888 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகரத்தில் 1,410 வழக்குகளும், திருச்சி மாநகரத்தில் 221 வழக்குகளும், கோவை மாநகரத்தில் 333 வழக்குகளும், சேலம் மாநகரத்தில் 440 வழக்குகளும், மதுரை மாநகரத்தில் 556 வழக்குகளும், திருநெல்வேலி மாநகரத்தில் 219 வழக்குகளும், திருப்பூர் மாநகரத்தில் 242 வழக்குகள் என மொத்தம் 7 மாநகரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக 3,421 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல, தமிழகத்தில் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களி கடந்த 10 ஆண்டுகளில் 11,340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 6 ஆயிரத்து 95 வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

2021ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, அதிகபட்சமாக சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் மாநிலமாக 19 ஆயிரத்து 173 வழக்குகளுடன் மத்திய பிரதேச மாநிலம் முதல் இடத்திலும், 51 வழக்குகளுடன் நாகாலாந்து மாநிலம் கடைசி இடத்திலும் உள்ளது.

யூனியன் பிரதேசங்களில் 7 ஆயிரத்து 118 வழக்குகளுடன் டெல்லி முதல் இடத்திலும், 1 வழக்குடன் லடாக் கடைசி இடத்திலும் உள்ளது. 6 ஆயிரத்து 64 வழக்குகளுடன் தமிழகம் 10-வது இடத்தில் உள்ளதாகவும், பதிவான வழக்குகளில் 91.2 சதவீதம் வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2021ஆம் ஆண்டு போக்சோ குற்ற வழக்குகள் தொடர்பான பட்டியலில் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிக வழக்குகளுடன் மாறி மாறி முதல் மூன்று இடங்களில் நீடித்து வரும் நிலையில், அடுத்தபடியாக அதிக போக்சோ வழக்குகளுடன் தமிழகம் உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு மொத்தம் 3 ஆயிரத்து 898 போக்சோ வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் ஜூன் மாதம் வரை மட்டுமே தமிழகத்தில் 2 ஆயிரத்து 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், போக்சோ குற்ற வழக்குகளின் சதவீதம் அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increase in sexual assault cases against children in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->