தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரிகளின் பட்டியல்!
India election commission appointed 10 IAS officers
வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்!
இந்திய தேர்தல் ஆணையம் புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 01/01/2023 தேதியினை தகுதியாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை கண்காணிக்கும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக நியமனம் செய்துள்ளது. வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் சுருக்கமுறை திருத்த பணிகளை அவருக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தது மூன்று முறையாவது பயணம் மேற்கொண்டு மேற்பார்வையிட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் கூட்டங்களை நடத்துவதோடு, பொதுமக்களை சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை குறித்தும் ஆய்வு செய்வர். அவர்களின் ஆய்வுக்கு பின்னர் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புவர். இதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் கலைந்தாய்வுக் கூட்டத்தினை தமிழக தேர்தல் அதிகாரி இன்று(26/10/2022) நடத்தினார்.
அதன்படி,
1) தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டத்திற்கும்.
2) பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அணில் மேஷ்ராம் காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திற்கும்.
3) தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கும்.
4) தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக இயக்குனர் சோபனா கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மாவட்டங்களுக்கும்.
5) துணிநூல் ஆணையரக ஆணையர் வள்ளலார் அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களுக்கும்.
6) மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஆபிரகாம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கும்.
7) பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சிவசண்முகராஜா கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கும்.
8)அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இயக்குனர் மகேஸ்வரன் திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டத்திற்கும்.
9) சிறு கூறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு செயலாளர் மகேஸ்வரி மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும்.
10) நில நிர்வாக ஆணையரக ஆணையர் ஜெயந்தி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும்" பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
India election commission appointed 10 IAS officers