தமிழக மீனவரைச் சுட்ட இந்திய கடற்படையினர்.! பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்.!
indian navy shoot tn fisherman cm write letter to pm
இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மூன்று பேர் என்று மொத்தம்10 மீனவர்கள் தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஐ.என்.எஸ். பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் வீரவேல் என்ற மீனவரின் வயிறு மற்றும் தொடையில் குண்டு பாய்ந்து, அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் இந்தியக் கடற்படையினரின் கோர செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஆனால், இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.
எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் இந்திய மீனவர்களை கையாள்வதற்குரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்" வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary
indian navy shoot tn fisherman cm write letter to pm