போச்சு.. இனி பருப்பு, பாமாயில் கிடைக்காது? அதிர்ச்சி தகவல்.. புலம்பும் ரேஷன் கடை ஊழியர்கள்
Info only may month dal palm oil only available in ration shop
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் குடோன்களில் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் இருப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய மே மாதத்திற்கான அனைத்து உணவு பொருட்களும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான கடைகளுக்கு பருப்பு மற்றும் பாமாயில் வினியோகம் செய்யப்படவில்லை.
தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கழகத்தின் டெண்டர் முடிந்த நிலையில் புதிதாக இன்னும் ஒப்பந்தமாகவில்ல என தகவல் வெளியாகி உள்ளது. மே மாதத்திற்கான விநியோகம் ஏறக்குறைய முடிவுற்ற நிலையில் குணாளங்களில் பருப்பு மற்றும் பாமாயிலின் இருப்பு இல்லாததால் இதன்பிறகு பொதுமக்களுக்கு பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்த விதிகள் அமலில் இருப்பதால் புதிய டெண்டரை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் புலம்புவதாக தெரிய வருகிறது. இதற்கிடையே ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கு வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் ரூ.419 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பருப்பு மற்றும் பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரித்த போது குடோன்களில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் ரேஷன் பருப்பு மற்றும் பாமாயில் தற்போது வரை கடைகளுக்கு விநியோகம் செய்யப்படவில்லை. ஏறக்குறைய மே மாதத்தின் 3 வாரங்கள் நிறைவு பெற்ற நிலையில் இதற்கு மேல் ரேஷன் கடைகளுக்கு பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்வது சாத்தியமற்றது. அதனை மீறி விநியோகம் செய்யப்பட்டாலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் எங்கள் தலை தான் உருள போகிறது என புலம்புகின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.
English Summary
Info only may month dal palm oil only available in ration shop