துப்புரவு தொழிலாளர்கள் அவமதிப்பு! மெதுவாக வாங்க என்று சைகை காட்டினேன்! நடிகை ரோஜா விளக்கம்!
Insult of cleaners issues Actress Roja explained
திருச்செந்தூர் கோவிலில் நடிகை ரோஜா துப்புரவு தொழிலாளர்களை அவமதித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் அது குறித்து நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் திருச்செந்தூர் கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்வதற்காக அவருடைய கணவர் இயக்குனர் ஆர்.கே செல்வகுமார் உடன் சென்றார்.
அப்போது நடிகை ரோஜாவுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது நடிகை ரோஜாயுடன் புகைப்படம் எடுக்க நெருங்கி வந்த துப்புரவு தொழிலாளர்களை சைகை மூலம் தள்ளி நிற்கும்படி சொன்னதாக சர்ச்சை கிளம்பியது. துப்புரவு பணியாளர்களை அவமதித்து விட்டதாக ரோஜாவை பலரும் கண்டித்தனர்.
இதற்கு நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும் போது, நான் திருச்செந்தூர் கோவிலில் கணவருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் எண்ணுடன் புகைபடம் எடுத்துக் கொண்டார்கள் யாரையும் தடுக்கவில்லை துப்புரவு தொழிலாளிகள் சிலரும் புகைப்படம் எடுக்க ஓடி வந்தார்கள்.
கோவிலில் தரைதளம் தாழ்வாக இருந்தது அவர்கள் ஓடி வந்ததால் விழுந்துவிடப் போகிறார்கள் என்று கருதி மெதுவாக வாங்க என்று மட்டும் தான் கையை காட்டி பேசினேன். அவர்களை நான் தொடக்கூடாது தள்ளினீள்ளுங்கள் என்று சொன்னதாக தவறாக சித்தரித்து இருக்கிறார்கள்.
துப்புரவு தொழிலாளிகள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவர்களை தொட வேண்டாம் என்று எப்படி சொல்வேன் என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்பது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Insult of cleaners issues Actress Roja explained