ஆவினில் மூலிகை பால் அறிமுகப்படுத்த தீவிர ஆய்வு - ஆவின் நிறுவன அதிகாரிகள் தகவல்!
Intensive study to introduce herbal milk in Aavin Aavin company officials inform
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையமான ஆவின், பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஆவின் நிறுவனம் வாயிலாக, தற்போது தினசரி 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில், இந்த பால் கொழுப்புசத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன.
இது தவிர வெண்ணெய், நெய், தயிர், மோர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், "மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகியவற்றை விரைவில் மக்களுக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆவினில் மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகிய 3 புதிய பொருட்களை அறிமுகப்படுத்த ஆராயப்படுவதாக, ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், இதற்காக ஒரு தொழில்நுட்ப குழு, இவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர் என்றும்,, விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஆவின் சார்பில் ரோஸ் மில்க்கை அறிமுகப்படுத்தியது நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிவித்த அதிகாரிகள், இந்த 3 பொருட்களுக்கு எங்கு எல்லாம் தேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, சோதனை அடிப்படையில் விநியோகிக்கப்படும் என்றும், தேவை அடிப்படையில், இவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினர்.
English Summary
Intensive study to introduce herbal milk in Aavin Aavin company officials inform