திருவண்ணாமலை to இங்கிலாந்து 122 நாடுகளின் 10 மாணவிகளில் நம் திருவண்ணாமலை மாணவி சர்வதேச விருதை வெல்லுவாரா?
International Award Tamil Nadu girl selected
உலக அளவில் கற்றல் மூலமாக, சமூகத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ள தலைசிறந்த மாணவர்களுள் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு பிரிட்டனைச் சேர்ந்த செக்.ஓ.ஆர்ஜி. அமைப்பு ரூ.82 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய இந்த விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டுக்கான விருதுக்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3,851 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அதில் இருந்து 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 50 மாணவர்களில் ஒருவர், தேர்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படும். இந்த 50 போட்டியாளர்களில் தமிழக மாணவி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா சர்வதேச பள்ளி மாணவி வினிஷா உமா சங்கர் (வயது16), பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 5 மாணவர்கள் இறுதிப்போட்டியாளர்களாக இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
தமிழக மாணவியான வினிஷா உமாசங்கர், தனது 12-வது வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, மின்சாரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் மின்விசிறி உள்ளிட்டவைகளை கண்டு பிடித்துள்ளார்.
இவர் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் பங்கேற்று சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 50 பேரில் இருந்து 10 பேர் இறுதிப் போட்டியாளர்களாக அடுத்த மாதம் தேர்வு செய்யப்பட்டு, 10 பேரில் இருந்து வெற்றியாளர் ஒருவரை ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படுவார்.
English Summary
International Award Tamil Nadu girl selected