உப்பு, சப்பு இல்லாதது பட்ஜெட் என கூறுவதா? முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு பாஜக சரமாரி கேள்வி!
Is it a budget without salt and salt? BJP questions former CM V Narayanasamy
மத்திய அரசின் பட்ஜெட் உப்பு, சப்பு இல்லாதது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் கூறியிருப்பது அவரது அரசியல் அனுபவத்தை கேள்விக்குறியாகின்றது என பாரத பிரதமரின், நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் புதுச்சேரி மாநில மாநில பொறுப்பாளர் சக்திவேல் கூறியுள்ளார்,
இது குறித்து என பாரத பிரதமரின், நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் புதுச்சேரி மாநில மாநில பொறுப்பாளர் சக்திவேல்,மற்றும்பாஜக சமூக ஊடக துறை மாநில பொறுப்பாளர், திரு. மகேஷ் ரெட்டி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கென எவ்வித நிபந்தனையின்றி ரூபாய் 3,432 கோடி ரூபாய் நேரடியாக அளித்துள்ளது. மேலும் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை புறக்கணித்துள்ளது போல மாயா தோற்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களை உருவாகியுள்ளது... பொய்மூட்டைகளை அவழித்துவிடுவது அவர்களுக்கு கைவந்தக்கலை.
ஆகவே மத்திய அரசு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் வகுத்துள்ள திட்டங்கள் மற்றும் நிதி பங்கீடுகள் தொடர்பானதகவல்கள் வெளியிடுவது காலத்தின் கட்டாயம்.
கிழ்கண்ட திட்டங்கள்:
புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி பட்ஜெட் ஒதுக்கீடு ரூபாய்: 3,432 கோடி.
2025-26 ஆண்டிற்கான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மேம்பாடு 1, 450/- அதில் 150 கோடி உட்கட்டமை மேம்படுத்துதல்.
PM-SVANidhi திட்டம் மூலம் UPI - Linked கடன் அட்டைகள் மூலம் தொழிலை மேம்படுத்த ரூபாய்: 30,000/- புதுச்சேரி மாநில சாலையோர வியாபாரிகள் 3, 533 நேரடியா வழங்கப்படும்.
புதுச்சேரி விவசாயிகள் பயன்படுத்து கிசான் கடன் அட்டைகளின் கடன் தொகை 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியுள்ளது, இதன்மூலம் 16,000 புதுச்சேரி விவசாயிகள் நேரடியாக பயப்பெறுவர்கள்.
அதிதரவிடர்கள் மற்றும் மீனவ சமூதாய மக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டங்களில் நிதிஒதுக்கீடு மற்றும் சிறப்பு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் மேலாண்மை (ஜெல் ஜீவன்) திட்டத்திற்கு ரூபாய்: 186.44 கோடி.
மோடி அரசானது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் BHARATHNet Initiative என்கின்ற 24/7 இணையவசதிகளை நிறுவிட நிதிகளை ஒதுக்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் (Daycare cancer centres) கட்டாயம் தொடங்கிட வேண்டும். என மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் நேரடியாக பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
2025-26 பாராத ரயில்வே துறை 1,300 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதில் AMRIT BHARATH STATION SCHEME(ABSS) கீழ் புதுச்சேரி, காரைக்கால், மஹே ஆகிய பிராந்தியங்கள் உட்பட மேம்பாட்டிற்கான நிதிகளை ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு "நகர்ப்புறங்களை நவீனமயமாக்குதல்" திட்டத்தின் கீழ் 2025-26 ஆண்டு ரூபாய்: 1000 கோடி ஒதுக்கியுள்ளது, நீர் மேலாண்மை பொதுசுகாதாரம் உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 17 ATAL TINGERING LAB செயல்பாட்டில் உள்ளநிலையில் மேலும் மாணவர்கள் தொழிமுனைவோர்களாக மேம்படுத்திட 2025-26 மேலும் 500 ATAL மையங்களை உருவாக்கிட முனைந்துள்ளது.
புதுச்சேரி பாரம்பரிய அடையாளமான பருத்தி உற்பத்தி, நெய்தல், தொழிநுட்பம் மேம்படுத்தல் மற்றும் பாரம்பரிய ஆடைகளை உற்பத்தி மேம்படுத்திடவும் அதன் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு முனைந்துள்ளது.
மோடி அரசின் கவனம் புதுச்சேரி மாநிலத்தில் உற்பத்தியாகும் கறுப்பு உளுந்து உற்பத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதை உணர்ந்துள்ள பிரதமர், உளுந்து சாகுபடி விவசாயிகளுக்கு பாதுகாப்பான விலை மற்றும் மதிப்புக்கூட்டுதலில் கவனம் கொண்டுள்ளது.
மேலும் வரவு செலவு கணக்குகள் வருகின்ற 2025-புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு புதுச்சேரி சட்டமன்றத்தால் வெளியிடப்படும் என்று அவர்கள் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளனர்.
English Summary
Is it a budget without salt and salt? BJP questions former CM V Narayanasamy