அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி கைவிடப்பட்டதா? மௌனம் காக்கும் தமிழக அரசு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையின் பொழுது முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடர்வது குறித்தான எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்காததால் கடும் விமர்சனம் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து மாணவர் சேர்க்கையானது தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் தொடக்கப்பள்ளி கல்வித்துறை சார்பில் தற்போது வரை எல்கேஜி, யுகேஜி வகுப்பு தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் நேற்று தொடக்கப் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் வரும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 1ம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து எந்த ஒரு தகவலும் இடம்பெறவில்லை.

மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை ஆசிரியர்கள் நியமனத்திற்கான எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக வரும் கல்வியாண்டில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து தமிழக அரசு மௌனம் காத்து வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is LKG UKG Abandoned in TamilNadu Govt Schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->