சந்திரயான்-3 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி. 3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. 

இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூனில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,

சந்திரயான்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன.

அதனால், அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் ஜூனை (2023-ம் ஆண்டு) தேர்வு செய்து அதனை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்று விட்டன என்றும் மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO chairman says Chandrayaan 3 launch in June next year


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->