#BREAKING:: பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. "ஜாக்டோ-ஜியோ" அமைப்பினரின் போராட்டம் வாபஸ்..!! - Seithipunal
Seithipunal


புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்கள் இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை தளர்த்த வேண்டும், நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 11ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு சார்பில் 3 அமைச்சர்கள் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் ஜாக்டோ ஜியோ அமைப்பின் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் ஏற்கனவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் வரும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெற இருந்த கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள உடன்பாட்டை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அவருடன் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் தரப்பிலிருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jacto Geo organization protest was called off


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->