தெருவுக்கு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பு..!! ஸ்டாலின் கவனம் ஈர்க்க ஜன.5ல் திட்டமிட்டபடி போராட்டம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ அக விலைப்படியை தொடர்ச்சியாக 6 மாத காலம் தாழ்த்தியதோடு, நிலுவை தொகை வழங்க மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்டரை விடுவிப்பது, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழக முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜனவரி 1ம் தேதி முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பினை ஏற்று, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள், முதல்வர் மு.க ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது, 01/01/2023 முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதேபோன்று அக விலைப்படியை மத்திய அரசு வழங்கிய தேதியில் வழங்காமல் தொடர்ச்சியாக 6 மாத கால தாமத நிலுவைத் தொகை மறுத்தல், காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்டரை விடுத்தல், மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைத்தல், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், தினக் கூலியில் பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர். ஊர்ப்புற நூலகர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்துதல்.

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகையினை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்ற வாழ்வாதார மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு வாரிய ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்தும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேசினார்கள்.

இதனை அடுத்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இரா.தாஸ், ஆ.செல்வம். ஜே.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக ஜனவரி 5ம் தேதி முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களிலும் நடைபெறும்.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக ஏற்கனவே முடிவு செய்த வண்ணம் எதிர்வரும் 08/01/2023 அன்று மதுரையில் ஜாக்டோ ஜியோ உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. பிற்பகல் 2.00 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் கூட்டமும் அதனைத் தொடர்ந்து 3.00 மணிக்கு உயர் மட்டக் குழுக் கூட்டமும் நடைபெறும்'' என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jacto Jeo announced protest against TNgovt on Jan5


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->