சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை - போக்குவரத்து துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி. மேலும், இருவரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்தல் அவசியம்.

அதேபோல் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கு முதல் முறை ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவது மட்டுமில்லாமல் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

மேலும், சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டு செல்வது அதிகரித்து வருவதாகவும் இவ்வாறு வாகனத்தை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 ஆபிரகாம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jail sentence for parents if children drive in Pudhuchery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->