சற்று நேரத்தில் தொடங்கவுள்ள ஜல்லிக்கட்டு... காளைகளுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை!
Jallikattu bulls Medical examination
மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் காளைகளுக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளது. 1 காளை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய போட்டிகளில் முதலில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை மிக வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொறுத்தவரை 1000 காளைகள் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த 1000ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளது.
குறிப்பாக 40 மருத்துவ குழுக்கள் அடங்கிய 90 மருத்துவர்கள் காளைகளை பரிசோதிக்கின்றனர். ஏற்கனவே ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட காளை உரிமையாளரின் புகைப்படங்கள் ஆய்வு செய்து கொண்டுவரப்பட்டு, மருத்துவச் சான்றிதழ், காளையின் திமில் கொம்பு கூர்மையாக உள்ளதா? காலைக்கு ஊக்க மருந்து ஏதாவது கொடுக்கப்பட்டுள்ளதா என பரிசோத்தித்து வருகின்றனர்.
மேலும் காளையின் உயரம், உடம்புகளில் காயங்கள் உள்ளதா என்பது குறித்து முழுமையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
English Summary
Jallikattu bulls Medical examination