ஜல்லிக்கட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இந்த வருடம்..... வெளியான பரபரப்பு தகவல்.!
jallikattu no Audience
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்துக் வரும் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், புதிதாக உரு மாறியுள்ள ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புக்கும் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த வருடம் பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றும், வருகின்ற 7 ஆம் தேதி அல்லது 9 ஆம் தேதி வெளியாகலாம் என்று வெளியான அத்தகவல் தெரிவிக்கின்றது. அதற்குள் தமிழக முதல்வர் தலைமையில் மேலும் இரு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற வைப்புத்தகவும், அதன் பிறகே இதுகுறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இது அதிகாரப்பூர்வ செய்தி இல்லை. வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த செய்தி சொல்லப்படுகிறது.