திமுக எம்.எல்.ஏவின் சகோதரி மகன் வெட்டி படுகொலை!! தஞ்சையில் பதற்றம் - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருக்கும் கண்ணதாசனின் சகோதரி மகன் கலைவாணன் என்பவர் தஞ்சாவூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள நெய் குணம் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கலைவாணனின் உடலை கைப்பற்றிய பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளுங்கட்சி எம்எல்ஏவின் சகோதரி மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayankondam DMK MLA sister son murdered


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->