அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஜே.பி.நட்டா! என்னங்க ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரு?!  - Seithipunal
Seithipunal


கடந்த "40 ஆண்டு கால திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று, பாஜகவின் தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.

இன்று கிருஷ்ணகிரியில் பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கட்டிடத்தை திறந்துவைத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று கூட்டணி கட்சியான அதிமுகவையும் சேர்த்துவைத்து ஜேபி நடத்த விமர்சனம் செய்தார்.

மேலும் அவரின் உரையில், "பிரதமர் மோடி வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டு ஆட்சி செய்கிறார். காங்கிரஸ் கட்சி பிரித்தாலும் சூழ்ச்சியை செய்கிறது, மற்றொருபுறம் காங்கிரஸ் குடும்ப அரசியல் நடத்துகிறது. 

ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது. தமிழகத்தில் கடின உழைப்பால் விரைவில் தாமரை மலரும். 

காங்கிரஸின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின. மாநில கட்சிகள் குடும்ப கட்சிகளாக மாறி வருவதை நாம் பார்க்கிறோம்.

ஜம்முகாஷ்மீர், உத்தரப்பிரதேசம் தொடங்கி தமிழகம் வரை மாநில கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன. தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு பெயர் போனது திமுக.
 
ஆளும் திமுகவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. அவர்களின் வாரிசு, குடும்பத்தை பற்றியே கவலை. பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. மக்களுக்கான நேரடி ஆட்சியே பாஜகவின் ஆட்சி. 

தமிழகத்தில் 40 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தனர்? 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் (திமுக-அதிமுக) தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. பாஜக 9 ரயில்வே திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. "

2024ல் தமிழகத்தில் பிரதமர் மோடியின் கரங்களை தமிழக மக்கள் வலுபடுத்த வேண்டும். பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும். சட்டமன்றத்துக்கு வெளியிலும், உள்ளேயும் தமிழக மக்களின் குரலாக பாஜக உள்ளது. பாஜக கட்சி அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்" என ஜே.பி.நட்டா பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JB Nadda Attack ADMK Also Tamilnadu 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->