#அரியலூர் || காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி.! பெண்ணின் பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி ஒன்று, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த உடையார்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவரும் வினோதினி என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, சமயபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்பு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து போலீசார்,  மணமக்களின் பெற்றோர்களை காவல்நிலையத்துக்கு வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த திருமணத்திற்கு பெண் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கும் தங்களின் மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

இதனையடுத்து காதல் கணவன் சிவகுமாருடன் வினோதினியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JEYANKONDAM LOVE COUPLE IN POLICE STATION


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->