சென்னையில் ஜான் பாண்டியன் கைது! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பான கடிதத்தின் மீது விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்களை பேச அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை மையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் கூண்டோடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனை கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. காவல்துறை சட்ட ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் பலர் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரை சந்திக்க முற்பட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை கண்டித்து ஜான்பாண்டியன் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு வெளியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக தற்பொழுது ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று தமிழக மாநில தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

John Pandian arrested in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->