பிரபல பத்திரிக்கையாளர் திடீர் மரணம்.. மாரடைப்பால் காலமானார்.!  - Seithipunal
Seithipunal


பல்வேறு செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் துரை பாரதி தனது 67 வயதில் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கிறார். 

67 வயதான துரை பாரதி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். இவர் பத்திரிகையாளர் மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் இருந்து வந்தார். துரை பாரதியின் இயற்பெயர் வித்யா சங்கர்.

இவர் நிறைய கவிதைகளை எழுதி இருக்கின்றார். மேலும் பல்வேறு முன்னணி செய்தி சேனல்களில் பணியாற்றி இருக்கின்றார். இவர் பணியாற்றியது மட்டுமல்லாமல் பல செய்தி ஆசிரியர்கள் உருவாகவும் காரணமாக இருந்தவர். இந்த நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்து இருக்கிறார். 

பல்வேறு பத்திரிக்கையாளர்களும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்களை தெரிவித்து இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Journalist duraibarathi Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->