வெம்பக்கோட்டை அகழாய்வு - அரிய வகை கற்கள் கண்டெடுப்பு..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரைக்கும் நடத்தப்பட்ட இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றன.

மேலும், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் உள்ளிட்டவைகளை கிடைத்தன. 

இந்தப் பொருட்கள் அனைத்தும் அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

ஜாஸ்பர், சார்ட் எனப்படும் இந்தக் கற்களை நம் முன்னோர்கள், விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jwellary make stones found in vembakottai excavation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->