கி.வீரமணிக்கு முதலமைச்சர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal



திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். 

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று 91 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 1962 ஆம் ஆண்டு கி. வீரமணி திராவிடர் கழகத்தின் தலைவராக பெரியாரால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள கி. வீரமணி இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன், தி.மு.க எம்பி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்திலும் கி. வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K Veeramani wished birthday Chief Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->