கள்ளச்சாராய உயிரிழப்பு: அரசை கண்டித்து தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலாச்சாராய உயிரிழப்புகள் தொடரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு தடுக்க வேண்டும் என தெரிவித்து தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பதாவது, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தெரிவித்து ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் கிடையாது. 

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவிக்கும் தி.மு.க டாஸ்மாக் விற்பனையில் இலக்கு நிர்ணயித்து பெண்களை தாலியற்றவர்களாக மாற்றிக் கொண்டு வருகிறது. 

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கள்ளக்குறிச்சி உயிரிழப்புக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இதையெல்லாம் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை மக்கள் விரட்டியடிப்பார்கள். தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள். கள்ளச்சாராய உயிரிழப்பின் உண்மை தன்மையை மக்களுக்கு வெள்ளை அறிக்கையாக தெரிவிக்கும் வரையில் தே.மு.தி.க ஓயாது. 

இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து முறையிடவுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு சார்பில் விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallachchraya death DMDK protest against TN govt


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->