சிபிஐ விசாரணை கோரிய பாமக! தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!
Kallakurichi Kallasarayam case CBI Chennai HC PMK
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூறிய வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சிகள் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசின் அலட்சியம் தான் இதற்கு முழு காரணம் என்றும், தமிழக தமிழக அரசின் காவல்துறையை இதனை விசாரணை செய்தால் விசாரணை நேர்மையாக இருக்காது என்றும் அரசியல் கட்சிகள் தெரிவித்து இருந்தன.
மேலும், இதில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதால் இந்த கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், இன்று வழக்கின் இறுதி விசாரணை நடந்து முடிந்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, மதுவிலக்கு துறை ஏன் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Kallakurichi Kallasarayam case CBI Chennai HC PMK