ஆதாரம் இருக்கு! எம்எல்ஏ, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்க எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் போர்க்கொடி!
Kallakurichi Kallasarayam issue Minister Ma Subramaniyan Press meet
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், போதிய அளவு விஷ முறிவு மருந்து இல்லாததால் தான், கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில், போதிய அளவு விஷ முறிவு மருந்து இருந்ததற்கான ஆதாரம் இருக்கிறது என்று, அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தாவது, "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மருந்துகள் இல்லாததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மேற்குறிப்பிட்ட மருந்துகள் உள்ளதா என்பதை அதிமுகவினர் நேரில் சென்றே கேட்டறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் 4 கோடியே 42 லட்சம் ஒமெப்ரஸோல் (Omeprazole)மருந்துகள் கையிருப்பு உள்ளது. அது அல்சர் போன்ற வியாதிகளுக்கு தரப்படுகிறது.
ஃபோமெபிசோல் (Fomepizole) 4 கோடி 42 லட்சம் மருந்துகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ளது. மருந்துகள் கையிருப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் வெள்ளை அறிக்கை விடவேண்டும் என கூறியுள்ளார் அதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
நீங்கள் (இபிஎஸ்) மருந்து இல்லாததால் தான் இழப்புகள் ஏற்பட்டதாக பொய்யான தகவலை, ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் செய்தியை இன்று தமிழ்நாட்டுக்கு அறிவித்திருக்கிறீர்கள்.
நீங்கள் கேட்ட மருந்தெல்லாம் கையில் கையிருப்பில் இருக்கிறது என்பதற்கு உண்டான ஆதாரம் என் கையில் உள்ளது. இதனை பார்த்ததற்கு பிறகு நீங்கள் உங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியும் ராஜினாமா செய்வதுதான் தார்மீக கடமையாக இருக்கும். அதை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
English Summary
Kallakurichi Kallasarayam issue Minister Ma Subramaniyan Press meet