விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்! சென்னையில் அனுமதிக்கப்பட்ட நபரால் பெரும் பரபரப்பு!
Kallakurichi now vilupuram kallasarayam chennai hospital one case
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானாரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலர் கவலை கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 10 க்கும் மேற்பட்டிருக்கு பார்வை பறிபோய் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வரை கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் 52 பேரின் மரணத்திற்கு காரணமான விஷச் சாராயத்தை விற்பனை செய்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரின் மனைவி விஜயா, தாமோதரன், மூலப்பொருளான மெத்தனால் கொண்டு வந்த மாதேஷ், சின்னதுரை அவரின் நண்பர்கள் மதன் குமார், ஜோசப் ராஜா என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்களை போலீசார் வலைவீசி கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் விஷ சாராயம் குடித்த ஒருவர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அந்தியூரை சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணசாமி (38 வயது) என்பவர் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில், உடல் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 17ஆம் தேதி சொந்த ஊர் சென்று சாராயம் குடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய கிருஷ்ணசாமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தற்போது சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது விழுப்புரத்தில் சாராயம் குடித்தவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதா? வேறு யாருக்காவது உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
English Summary
Kallakurichi now vilupuram kallasarayam chennai hospital one case