கள்ளக்குறிச்சி கலவரம்.. தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த வந்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்த கலவரத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 10 க்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi protest Thanthai Periyar Dravida Kazhagam Secretary 2 Arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->