கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி விவகாரம் | அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட அமைச்சர்கள்! வெளியான உருக்கமான கடிதம்! - Seithipunal
Seithipunal



கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி விவகாரத்தில், கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அமைச்சர் குறித்து மற்றொரு அமைச்சருக்கு ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில், பனிரெண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கலவரமாக வெடித்தது.

இதில் அப்பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு தீக்கரியாகின. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில், சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரத்தில் எரிக்கப்பட்ட தங்களுடைய சான்றிதழ்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் வீட்டு தருவதாக உறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை மீட்டுத் தரவில்லை என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

அவர்களின் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ECR INTERNATIONAL பள்ளியில் சரிபார்ப்புப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களின் சான்றிதழ்கள் 17.07.2022 அன்று நடந்த கலவரத்தில் எரிக்கப்பட்டுவிட்டன. 

அதையொட்டி 18.07.2022 அன்று பள்ளியை ஆய்வு செய்வதற்காக வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சியர் அவர்களும் எரிக்கப்பட்ட சான்றிதழ்களை மீட்டுத்தருவதாக உறுதியளித்திருந்தார்கள். 

ஆனால் இதுவரையிலும் அச்சான்றிதழ்கள் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் எந்த போட்டித் தேர்விற்கும், ஆசிரியர் தகுதி தேர்வு உட்பட எங்களால் விண்ணப்பிக்க இயலவில்லை. 

அக்காரணத்தினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அச்சான்றிதழ்களை மீட்டுத் தந்தால் இனிவரும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க உதவியாக இருக்கும். எனவே அச்சான்றிதழ்களை விரைந்து மீட்டுதர உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi sakthi school teachers letter to ponmudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->