குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம் - கமல்ஹாசன் கருத்து! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், யாரையும் குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று தனது கருத்தினையும் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போதுவரை இருந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 106 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரியில் 17 பேரும், சேலத்தில் 30 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்றுவரும் நபர்களை ஆளும் கட்சி முதல் சிறிய கட்சி தலைவர்கள் வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும், சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த கமல்ஹாசன், டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும். குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று தனது கருத்தினையும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் கருத்து என்ற பெயரில் பாமர மக்களுக்கு புரியாமல் பேசி வருகிறார், சமூகநீதி குறித்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், மது குடிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தற்போது அவர் தெரிவித்துள்ள கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஆளும் திமுக கூட்டணியில் (விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மநீம ஆதரவு) இருப்பதால், மது விலக்கு, டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று பேசினால் கூட்டணி தர்மம் மீறியதாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் கமலஹாசன் இப்படி உள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi spirit death MNM Actor KamalHasan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->