விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறங்கிய கள்ளக்குறிச்சி ஸ்ரீ மதி தாய்! வேட்புமனு தாக்கல் செய்த கையோடு சொன்ன காரணம்! - Seithipunal
Seithipunal


விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கி, இன்று நிறைவடைந்துள்ளது. மொத்தம் 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

வருகின்ற ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெ உள்ளது. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று, கணியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 12ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது. 

தற்போது வரை தனது மகள் மரணத்திற்கு நியாயம் கேட்டு ஸ்ரீமதியின் தாயார் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து செல்வி தெரிவித்ததாவது, என்னுடைய மகளுக்கு ஏற்பட்ட துயரம் வேறு எந்த ஒரு பெண் குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று செல்வி தெரிவித்தார். 

முன்னதாக, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் சற்று வித்தியாசமாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்திருந்தார்.

யாரும் எதிர்பாராத விதமாக வெள்ளை சேலை அணிந்து வந்து ஆறுமுகம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தது அங்கு பலரின் கவனத்தை ஈர்த்தத்துடன், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Srimathi mother in Vikravandi By Election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->