கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்.. உச்ச நீதிமன்றத்தை நாடிய தந்தை.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி பள்ளி விடுதியில் தங்கி இருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. 

ஆனால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவி தாயார் புகார் தெரிவித்து இருந்தார். அதற்கேற்ற போல பிரதேச பரிசோதனையில் மாணவியின் உடலில் காயங்கள், ஆடைகளில் ரத்த கரைகளும் இருந்தது தெரியவந்தது. இதனால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். 

அதன்பிறகு மக்கள், மாணவ அமைப்பு என பல்வேறு தரப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதால், போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்திற்குள் இருந்து பேருந்துகளை தீ வைத்து எரித்தும், போலீஸ் வாகனத்தை தீ விபத்து எரித்தும் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்ததால் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். பதிலுக்கு போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர்.  நிலைமை விபரீதமான அதை அறிந்து, இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டது. 

உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை உயர்நீதிமன்றம் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வழக்கு தொடர்ந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைத்து நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவர்கள், தடயவியல் துறை அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும். மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தை தான் அணுக முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடவும் திட்டம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi student death case for supreme court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->