#கள்ளக்குறிச்சி: மாணவிகளை வேலை செய்ய சொல்லி வற்புறுத்தல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கள்ளகுறிச்சி மாவட்டத்தில் மதிய உணவு சமைக்க பள்ளி மாணவிகளை தண்ணீர் எடுக்கச் சொல்லி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொட்டியம் பகுதியில் உண்டு உரைவிட நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை மதிய உணவு சமைப்பதற்காக குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்லி ஆசிரியர்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

இதனை தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு காலை 11 மணிக்கு தான் வருகை புரிவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது. 

இவ்வாறு மதிய உணவு சமைக்க பள்ளி மாணவிகளை தண்ணீர் எடுக்கச் சொல்லி வற்புறுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi students forced To work for sathunavu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->