கள்ளக்குறிச்சி: உ.பி பானி பூரி தொழிலாளி குடும்பத்திற்கும் 10 லட்சம் ரூபாய்?!
Kallakurichi Uttar Pradesh labour death Tamil Nadu government
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விஷச்சாராயத்தால் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் பிஜேந்தர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரை மாவட்ட நிர்வாகம் தேடி கண்டறிந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில்ல் மொத்தம் 184 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் 50 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிஜேந்தர் என்பவரும் உயிரிழந்தார்.
இவர், கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக பானி பூரி கடை வைத்து வந்துள்ளார். இந்த விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இறந்தவரில் இவர் ஒருவர் மட்டுமே வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் பத்து லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்த நிவாரணத் தொகை வெளி மாநிலத்தை சேர்ந்த பிஜேந்தர் குடும்பத்திற்கு கிடைக்குமா என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கிடையே வெளியான ஒரு தகவலின் படி, விஷச்சாராயத்தால் உயிரிழந்த உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிஜேந்தர் குடும்பத்தை அரசு அதிகாரிகள் கண்டறிந்து உள்ளதாகவும், அவரின் குடும்பத்தினர் நாளை கள்ளக்குறிச்சி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பிஜேந்திரனின் குடும்பத்திற்கும் தமிழக அரசு ஒதுக்கிய 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அரசு அதிகாரிகள் வழங்க உள்ளதாகவும் தகவல் உள்ளது.
English Summary
Kallakurichi Uttar Pradesh labour death Tamil Nadu government