கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாடு திருடிய 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது மாடு திருடியதாக கைதான 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 350-க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது மாடு திருடியதாகவும், போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakuruchi Protest 4 mans arrested kundas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->