கமல்ஹாசன் குறித்து அவதூறு பதிவு: நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது புகார்! - Seithipunal
Seithipunal


நடிகர் கமலஹாசன் குறித்து அவதூறு கருத்துகளை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் பரப்புவதாக தெரிவித்து கோவை காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு நகர செயலாளர் தலைமையில் கோவை மாநகர காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த மனுவில்  தெரிவித்திருப்பதாவது, நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். 

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும் மக்கள் நீதி மய்யம் குறித்தும் உண்மைக்கு புறம்பான தகவல்களை அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். 

அதில், கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற ஊர் தான் கமலஹாசனின் பூர்வீகம். அவர் ஒரு கன்னடர் என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை எவ்வித ஆதாரமும் இன்றி முன்வைத்து கமலஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதனால் அவரது யூடியூப் சேனலில் இருந்து அந்த கருத்தை அகற்றி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் சாட்டை துரைமுருகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Haasan against Defamation Tamil party leader against complaint


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->