காஞ்சிபுரம் | 7 மாதங்களுக்கு முன் காணாமல் நண்பன் எலும்பு கூடாக மீட்பு! மது போதையால் அம்பலமான ஒரு கொடூர கொலை! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்: பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (வயது 30). இவர் மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர்தனபாலின் உறவினர் ஆவார். இவர் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று, பின்னர் திரும்ப வரவில்லை. 

இது குறித்து சிவகாசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில், இது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இதற்கிடையே அவரது நண்பர்கள் மது போதையில் அடித்து கொலை செய்து, அவரது உடலை கல்லில் கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கிரிதரனின் நண்பர்களான பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ஆகாஷ், ஹரிஷ், தாமோதரன் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கிரிதரனை கொலை செய்து புதுப்பாளையம் அருகே பாலடைந்த வீட்டுக்குள் உள்ள கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்து. பின்னர் போலீசார் மீட்பு படையினருடன் சென்று கிணற்றில் வீசப்பட்ட கிரிதரனின் உடலை மீட்டனர். 

அவர் மாயமாகி 7 மாதங்களுக்குப் பின் உடல் மீட்கப்பட்டதால் முழுவதும் எலும்பு கூடாக இருந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், ஜனவரி மாதம் 13ஆம் தேதி நண்பர்களுடன் கிரிதரன் மது குடித்த போது கிரிதரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்று வாக்குவாதம் ஏற்பட்டு நண்பர்கள் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

மேலும் இந்த சம்பவம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் மரக்கிளைகளையும் வெட்டி போட்டிருக்கின்றனர்.

கிரிதரன் உயிரிழந்த சம்பவம் வெளியில் தெரியாமல் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிதரனின் நண்பர்கள் மது அருந்திவிட்டு போதையில் இருந்தபோது, கிரிதரனை கொலை செய்து கிணற்றில் வீசி இருப்பதாக உளறி உள்ளனர். 

அதன் பின்னரே கிரிதரன் உயிரிழந்தது தெரியவந்தது. பிரபல ரவுடி ஸ்ரீதர்தனபாலின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanjipuram 7 months after recovery teenager dead body


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->