பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உள்பட 200 பேர் கைது!
kanjipuram forming land protested 200 peoples including women's arrested
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்:
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் அமைக்கப்பட உள்ளதால் அங்குள்ள விவசாய நிலங்கள் கையகபடுத்த வேண்டியுள்ளது.
இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மஞ்ச நாதன் தலைமையிலான அதிகாரிகள், குழுக்களாக இன்று காலை விமான நிலையம் அமைக்க உள்ள பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளனர்.
அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பேத்கர் சிலையில் இருந்து மதுரமங்கலம் செல்லும் சாலையில் கோஷம் எழுப்பியபடி ஏகனாபுரம் கிராமமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் கிராமமக்கள் அதிகாரிகளை வழிமறித்து தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சிலர் திடீரென சாலையில் படுத்து உருண்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
English Summary
kanjipuram forming land protested 200 peoples including women's arrested