சட்டவிரோத லாட்டரி விற்பனை! காஞ்சிபுரத்தில் வசமாக சிக்கிய 10 பேர்!
Kanjipuram Illegal Lottery sale police arrest
காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தின் பிரபல செய்தி ஊடகம் ஒன்று வெளியீட்டுள்ள செய்தியில், கூலித் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 2000 வரை இந்த சட்டவிரோதமான லாட்டரி விற்பனையால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அலுவலகங்கள், வீடு, கடைகளில் வைத்து இந்த சட்ட விரோத லாட்டரி விற்பனை நடைபெறுவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
லாட்டரி சுரண்டல் முறையிலும் இந்த லாட்டரி விற்பனை நடைபெறுவதாகவும், இதன் மூலமாக கூலி தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்களது பணத்தை தினந்தோறும் இழந்து வருவதாக அந்நிறுவனம் செய்துள்ள கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பழைய ராஜாஜி சாலை பேருந்து நிலையம் அருகே, கேரளாவின் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த 10 பேரை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதுபோல் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kanjipuram Illegal Lottery sale police arrest